Tamil

பார்வையற்றோருக்கான இந்திய தாமரை நல அறக்கட்டளை

பார்வையற்ற சமூதாயம் குறிப்பாக பார்வையற்ற மகளிர் நலன், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சேவை செய்யும் பொருட்டு, அரசு மற்றும் வங்கிப் பணிகளில் இருந்த ஏழு பார்வையற்றவர்களைக் கொண்டு, பார்வையற்றோருக்கான இந்திய தாமரை நல அறக்கட்டளை அக்டோபர் 25, 2002 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் சிறு கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் இருந்து சென்னையிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் ஏழை பார்வையற்ற மாணவிகளின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அறக்கட்டளையின் முதன்மை செயல் திட்டமாக இலவச விடுதி 14.04.2003 அன்று, மூன்று பார்வையற்ற மாணவிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது அது விரிவுப்படுத்தப்பட்டு, விடுதியில் சராசரியாக ஆண்டுதோறும் 50 மாணவிகள் தங்கி பயனடைந்து வருகின்றனர். ஜாதி, மாதம், இனம், மொழி பாகுபாடு இல்லாமல் மாணவிகள் விடுதியில் சேர்க்கப்படுகின்றனர்.

இவ்விடுதியில் தங்கிப் பயனடைந்த மாணவிகளில், 250க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பள்ளி-கல்லூரி ஆசிரியர், வங்கிப்பணி, மைய-மாநில அரசுப்பணி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்று தற்சார்பு அடைந்ததுடன், நல்லதொரு குடும்ப வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டு சுயமாக வாழ்ந்து வருகின்றனர்.

விடுதி மாணவிகளுக்கு பாதுகாப்பான உறைவிடம், உணவு, மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. விடுதி மாணவிகளின் படிப்பு தொடர்பான கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தன்னார்வலர்களின் உதவியுடன் விடுதியின் வளாகத்திலேயே மாணவிகளுக்கு வாசிப்பாளர் வசதி செய்து தரப்படுகிறது.

இவ்வீடுதி துவக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது, 2007 ஆம் ஆண்டிலிருந்து சுரனா&சுரனா பொதுநல அறக்கட்டளையின் ஆதரவினால் விசாலமான இரண்டு அடுக்கு முதன்மை கட்டிடம் மற்றும் பின்னிணைப்பு கட்டிடம் (Main & Annexure Building) இலவசமாக வழங்கப்பட்டு சென்னையின் மையப்பகுதியான மயிலாப்பூரில் பார்வையற்ற பெண்களுக்கான விடுதியாக பாதுகாப்புடன் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்ரீ பனஸ்கந்தா பலான்பூர் அஷோசியேஷன் என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை, நமது லோட்டஸ் விடுதிக்கு பல ஆண்டுகளாக மளிகை பொருட்களை இலவசமாகவும், அறக்கட்டளையின் ஒரு பகுதி நிர்வாக செலவுக்கான நிதி உதவியையும் வழங்கினர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துககொள்கிறோம்.

விடுதியில் தங்கும் மாணவிகளை அக்கறையுடனும் பொறுப்புடனும் கவனித்துக் கொள்வதற்காக முழுநேரம் பணியாற்றும் விடுதி பாதுகாவலர் ஒருவரும், சமையல் பணிக்கு சமையல் பணியாளர்கள் இருவரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், இத்துடன் உதவியாளர் (Clerk) ஒருவரும், பகுதிநேர தூய்மை பணியாளர் ஒருவரும் மாத ஊதியத்தின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். விடுதியில் பணியாற்றும் அனைவரும் மகளிர் மட்டுமே. மேலும் மாணவிகளின் பாதுகாப்புக்காக விடுதியில் CCTV காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்த பார்வையற்ற மகளிர் அரசுப்பணி, வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைபெறும் பொருட்டு, அவர்களுக்கு பேசும் மென்பொருள் (Voice Software) உதவியுடன் கணினிப் பயிற்சி மற்றும் போட்டித் தேர்வு எழுதுவதற்கானப் பயிற்சி வகுப்பு இலவசமாக அறக்கட்டளையின் அடுத்த செயல் திட்டமாக 2016 முதல் நடத்தப்பட்டது வருகிறது. இப்பயிற்சிக்கான வகுப்புகள் தேர்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு ஊதியத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது வருகிறது.

பயிற்சிப் பெற்ற 40 மாணவிகளில் பெரும்பாலானோர் மைய-மாநில அரசுப்பணி, வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

அறக்கட்டளையின் செயல்பாடுகள், விடுதி நிர்வாகம், கணினி மற்றும் போட்டித் தேர்வுக்கானப் பயிற்சி வகுப்பு ஆகியவை தடையின்றி செம்மையாகச் செயல்படுவதற்க்கு ஏதுவாக சமூகத்தில் உயர்ந்த நிலையிலுள்ள ஆன்றோர்கள் அடங்கிய ஆலோசனை குழுவைக் கொண்டு, அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

அறங்காவலர்கள்

1 . முனைவர் k. பாலகிருஷ்ணன், தலைமை அறங்காவலர் (Retired Principal, Government Arts college)

2. S. பஞ்சாபகேசன், அறங்காவலர் மற்றும் பொருளாளர் (Retired from Punjab National Bank)

3. K. ஜகதீசன, அறங்காவலர் (Retired PG assistant)

4. K. மகேஷ்வரி, அறங்காவலர் (Employed as a BT Assistant, Government School, Dharmapuri)

ஆலோசனை குழு உறுப்பினர்கள்

1. திரு. கைலாஷ் மல் துகார், தலைவர் (Industrialist)
2. திரு. P.S.பாலசுப்ரமணியன் (Company Director)
3. திரு. சஞ்சய் N.மேத்தா ,(Philanthropist)
4. திரு. G.V.ராமன் (Executive Chairman of a Reputed NBFC)
5. திரு. T.S.கோபால் (Social Activist)
6. திரு. V.லதா (Retired from BSNL/Social Activist)
7. திரு. செந்தில்குமார் (Partner, N.Muthukumaraswamy & Co Charted Accountants)

மேற்கூறப்பட்ட அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்காக எந்தவிதமான உதவிகளையும் அரசிடமிருந்து பெறாமல், அனைத்தும் தொண்டுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் மேலான நிதியுதவி மற்றும் ஆதரவைப் பெற்று அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் மேலான பணியினை செய்வதற்கு எந்தவித சன்மானமும் அறக்கட்டளையிடமிருந்து பெறுவதில்லை என்பதை தெரிவித்துககொள்கிறோம்.

பெரு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியைப் பெறுவதற்கான CSR(Corporate Social Responsibility) சான்று மத்திய பெரு நிறுவனங்களின் விவகாரத்திற்கான அமைச்சகத்திடமிருந்து (Ministry of Corporate Affairs-Government of India) பெறப்பட்டுள்ளது.

அறக்கட்டளை தொடர்ந்து தங்கு-தடையின்றி சீரிய முறையில் செயல்படுவதற்க்கு, தொண்டுள்ளம் கொண்ட தாங்கள் அருள்கூர்ந்து நிதியுதவி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை வழங்க விரும்புவர்கள் பணமாகவோ, காசோலை மூலமாகவோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ அறக்கட்டளைக்கு வழங்கி உதவலாம், காசோலை(cheque) அல்லது வரைவோலை(Demand Draft)யாக வழங்க விரும்புபவர்கள் Lotus Blind Welfare Trust of India என்ற பெயரில் வழங்கலாம்.

ஆன்-லைன் மூலமாக நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பிவைக்கலாம்.

வங்கி கணக்கு

வங்கியின் பெயர் :-Punjab National Bank

கிளையின் பெயர் :-Royapettah Branch

கணக்கு எண் :-4386000100927538

IFSC Code :-PUNB0438600

வங்கிக் கணக்கு பெயர் :-Lotus Blind Welfare Trust of India

நன்கொடை வழங்குபவர்களுக்கு வருமானவரித்துறை மூலமாக 80G பிரிவின் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்படும். அதற்கான சான்று நகல் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும்.

சான்று பெறுவதற்க்கு தங்களைப் பற்றிய விவரங்களை பின்வருமாறு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் பெயர், முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, PAN number reference ஆகிய விவரங்களை அறக்கட்டளையின் மின்னஞ்சல் முகவரி-lbwtindia@gmail.com அல்லது கைபேசி எண்-90807 91227ற்கு வாட்ஸ்-ஆப் மூலமாக அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களின் பிறந்தநாள் விழா, திருமண நாள் விழா மற்றும் உயிர் நீத்தார்களின் நாளை நினைவு கூறும் பொருட்டு தாங்கள் நன்கொடையை வழங்கலாம்.

தற்ப்பொழுது ஒவ்வொரு விடுதி மாணவிக்கும் மாதந்தோறும் ரூ.3000/- சராசரியாக அறக்கட்டளை செலவு செய்து வருகிறது, பணவீக்கத்தின் காரணமாக வருங்காலத்தில் இச்செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், கணினி மற்றும் போட்டித் தேர்வுக்கானப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, எமது அறக்கட்டளையின் தன்னலமற்ற செயல்பாடுகள் தொய்வின்றி தொடர்ந்து செயல்பட தொண்டுள்ளம் கொண்ட தங்களின் மேலான நிதியையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களை தொடர்புக்கொள்ள:

முகவரி:-பார்வையற்றோருக்கான இந்திய தாமரை நல அறக்கட்டளை
எண் 8, திருவீதி அம்மன் கோயில் தெரு, YMIA எதிரில்,
மைலாபூர், சென்னை-600004.

கைபேசி எண்கள்:-+91 94437 70440(திரு கே. பாலகிருஷணன்),
+91 94448 55195(திரு எஸ். பஞ்சாபிகேசன்)
+91 90807 91227 (அலுவலக கைபேசி எண்)

தொலைபேசி எண்:-+91 44 3569 9913 (அலுவலக தொலைபேசி எண்)

மின்னஞ்சல் முகவரி:-lbwtindia@gmail.com

இணையதளம்:-www.lotusblindwelfaretrust.org